கிளப் வசந்த கொலை விவகாரம்: மேலும் ஒருவர் கைது
கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என்று எழுதியமை மற்றும் சந்தேகநபர்களை அத்துரிகிரிய கல்பொத்த பகுதிக்கு அழைத்துச்சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரான்சில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானின் உத்தரவின் பேரில் டுபாயில் பதுங்கியிருக்கும் லொகு பட்டி உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கிளப் வசந்தவின் கொலையை திட்டமிட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணை
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
