கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலை விவகாரம்: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற 'க்ளப் வசந்த' கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் வைத்து 31 வயதான பட்டி ஆரம்பகே அஜித் ரோஹன என்பவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அத்துருகிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பேருந்தில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற 29 வயதான வருண இந்திக்க சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன், T-56 ரகத் துப்பாக்கி,120 தோட்டாக்கள் மற்றும் 9mm பிஸ்டல் தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை
கடந்த மாதம் (08) திகதி அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
