கிளப் வசந்த கொலை விவகாரம்: மனைவி வெளியிட்ட தகவல்
அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகி மனநல சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மேலும் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாடகி சுஜீவா மற்றும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி, கிளப் வசந்தவின் மனைவி ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மனைவி வெளியிட்ட தகவல்
கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜயவர்தனவுக்கு மார்பிலும், கே.சுஜீவாவுக்கு காலிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயம் ஏற்பட்டதுடன், இருவரும் மிகவும் அதிர்ச்சியடைந்து மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கிளப் வசந்தவிற்கு என்ன நடந்தது என்பது முதல் நாளே தனக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் வேறொரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, அவரது உடல்நிலை குறித்து வைத்தியர்கள் தகவல் மறைத்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த அதிர்ச்சிக்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான அவர் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
