காலநிலை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் - செய்திகளின் தொகுப்பு
தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.
நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இது மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
