வெப்பமான காலநிலை குறித்து வெளியான தகவல்!
எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (26.04.2023) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெப்பநிலை குறைவடையவில்லை
மேலும், ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் வெப்பநிலை குறைவடையவில்லை.
இந்த நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தாலும், வளிமண்டலத்தின் வெப்பநிலையைக் குறைக்க கணிசமான மழைப்பொழிவு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையும் என அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது கடுமையான செயல்களைச் செய்ய வேண்டாம் என்றும் சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதால் நீர்ச்சத்து குறையும் என்வும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்கை குறிவைத்துள்ள பிரித்தானியா - புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பு News Lankasri

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
