சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! காலநிலை தொடர்பான அறிவிப்பு
பத்தலகுண்டு, மதவாச்சி, ஹொரவப்பொத்தானை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று (11) நண்பகல் 12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology)தெரிவித்துள்ளது.
காலநிலை(Climate) ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
2.00 மணிக்கு பின்னர் மழை
இதேவேளை கிழக்கு மற்றும் ஊவ மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.