முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு (Photos)
முல்லைத்தீவு மாவட்ட செயலக மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
இன்று (22.09.2023) காலை 10 மணியளவில், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் செயலமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் .வளவாளராக பீற்றர் சேவியர் கலீஸ் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறியிருந்தார்.
காலநிலை மாற்றம்
செயலமர்வின் போது திடீர் அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளல், நீர்நிலைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளல், தீ விபத்து, அவசர தொலைபேசி இலக்கங்களின் பாவனை, சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் மேலாளர் கணபதி பிரசாத், இணைப்பாளர் திஷான் மதுஷனா மற்றும் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
