குருநாகலில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்
குருநாகலில் உள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் 11ஆம் மற்றும் 12ஆம் தர மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இம்மோதலானது பாடசாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
