எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல் - ஒருவர் பலி
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி - மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ - ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனையவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்
நேற்றிரவு எரிபொருள் வரிசையில் வந்த படாதுவவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நண்பரின் கடைக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து தனது காருக்குள் நுழைய முற்பட்ட போது, வரிசையில் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது அவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் இதுகுறித்து தனது நண்பர்கள் சிலரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. காரின் சாரதியை துன்புறுத்தியவர்களை அவ்வழியாக வந்த சிலர் தாக்கத் தொடங்கினர்.
இதில் வரிசையில் நின்ற மூவரும் தாக்க வந்த குழுவில் ஒருவரும் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர், அவர்களில் ஒருவர் இறந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.