வவுனியாவில் மாடு கடத்தலில் ஈடுபட்ட இருவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்த அப் பகுதி இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவம் நேற்று(07.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
உரிய நடவடிக்கை
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டி நின்ற மாட்டினை திருடிச் சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் அவர்களை கட்டி வைத்து நையப்புடைத்ததுடன், வவுனியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தோடு, சந்தேக நபர் இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் பொதுமக்களிடத்தில் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த இருவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
