இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள்! அடுத்தடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID

CID - Sri Lanka Police Money Sri Lanka Banks
By Vethu Aug 23, 2026 07:25 AM GMT
Report

இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணப்பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மேற்கொள்ள வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வங்கிகளின் முக்கிய அதிகாரிகள்

இந்த விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள்! அடுத்தடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID | Cid To Arrest Bank Bosses

இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம், பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளை சில வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கு அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியுள்ளனர்.

பணப் பரிவர்த்தனை

பொதுவாக ஒருவர் வங்கியின் ஊடாக ஒரு கணக்கிற்கு அதிகளவிலான பணத்தை மாற்றும் போது, அதற்கான காரணங்களை விளக்கும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சில வங்கிகளின் ஊடாக பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள்! அடுத்தடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID | Cid To Arrest Bank Bosses

இந்த விடயங்களின் அடிப்படையில், வங்கிகளின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி அதிகாரிகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்” என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று தனியார் வங்கிகளுக்கு அதிடியாக புகுந்த அதிகார்கள், முகாமையாளர்களை கைது செய்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச நிலையில் வங்கி அதிகாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர! சிறைக்குள் செய்யும் வித்தியாசமான செயல்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர! சிறைக்குள் செய்யும் வித்தியாசமான செயல்

ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க

ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க

YOU MAY LIKE THIS VIDEO


நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US