ரணிலின் பிரத்தியேக செயலாளர் சிஐடிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரான சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணம் ஒன்று தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் குற்றப் புலனாய்வுப்பிரிவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம்
நாளைய தினம் சமன் ஏகநாயக்கவை நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் ரணிலின் செயலாளர்கள் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 14 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
