அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த விரும்பும் சக்திவாய்ந்த பெண்! பெரும் சிக்கலில் அரசியல்வாதிகள்
பாதாள உலகக்கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஆறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அடுத்த சில நாட்களில் வாக்குமூலங்களை பதிவு செய்ய CIDக்கு அழைக்கப்பட உள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த அரசியல்வாதிகளில் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த விரும்பும் ஒரு பெண் அரசியல்வாதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
அரசியல்வாதிகள் பலருக்கு சிக்கல்
பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் பிற குற்றவாளிகள் குறித்து CID அதிகாரிகள் வெளிப்படுத்திய தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, ஆறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளும் அடுத்த சில நாட்களில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட உள்ளதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இருப்பினும், கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
சி.ஐ.டியில் முன்னிலையானார் நாமல்
அரசியல்வாதிகள் மற்றும் பத்மேக்கிடையிலான நிதி பரிவர்த்தனைகள், குற்றங்களில் தொடர்பு உள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகி்ன்றது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் ஏனையவர்களிடம் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்களை கண்டுபிடித்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து பணம் பெற்றவர்களில் பல உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது பதவி வகித்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழுவின் பெயர்களும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகி "கெஹெல்பத்தர பத்மே" உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.