தம்பிராசாவை தேடும் புலனாய்வுப்பிரிவு : பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசாவை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தம்பி தம்பிராசாவை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு எதிரான பிடியாணையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த மே மாதம் 31ம் திகதி 84ம் இலக்கச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கியுள்ளது.
இவர் கொழும்பிலிருந்து மோட்டார் வாகனங்களை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்வதாக பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
90களின் ஆரம்பத்தில் இவர் ஒரு மனித கடத்தல்காரராக இருந்ததுடன் பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தாய்லாந்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பிழையான வழியில் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பலரை கனடாவிற்கு அனுப்புவதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தினை பெற்று அவர்களை சீனாவிற்கு அழைத்துச்சென்று நடுத்தெருவிலே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியவர் எனவும் பேசப்படுகிறது.
சர்ச்சையான காணொளி
2015ம் ஆண்டு தனது சொந்த மகனான நிருசனை (வயது 18) தானே மறைத்து வைத்து விட்டு அவரை சிலர் கடத்தியதாக பொலிஸில் போலியான முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவற்றைத் தொடர்ந்து அண்மையில் இடம்பெற்றிருந்த ஹரிஹரன் இசை நிகழ்வு தொடர்பில் அவர் சர்ச்சையான காணொளிகளை வெளியிட்டிருந்ததுடன், கனடாவிலிருந்த சிலரின் ஆதரவுடன் அந்நிகழ்வினை குழப்புவதற்கு செயற்பட்ட விசமிகளில் இவரும் ஒருவராக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தினூடாக தம்பிராசாவுக்கு எதிரான பிடியாணை பெறப்பட்டுள்ளது.
தம்பிராசாவை பற்றி தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தொலைபேசி இலக்கமான 1933 என்ற இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
