குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வரும் கொழும்பு பெண்ணின் உயிரிழப்பு சம்பவம்
வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள், நான்கு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று அதிகாரிகள், உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரியை, பணியிடை நீக்குவதா? அல்லது இடமாற்றம் செய்வதா? என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்குமாறு, பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
சம்பவத்தின் பின்னனி
பதுளையைச் சேர்ந்த 42 வயதான குறித்த பெண், தாம் பணியாற்றிய வீட்டில் இடம்பெற்ற தங்க ஆபரண திருட்டுச் சம்பவம் தொடர்பில், கடந்த (11.05.2023) ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
வீட்டின் உரிமையாளரான, தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பெண், தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்கு பணியாற்றிய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட தினத்தன்று, அவர், வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் வைத்து, உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மரணித்திருந்ததாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மரணம் சந்தேகத்திற்குரியது
இந்த நிலையில், தமது மனைவியின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி, குறித்த பெண்ணின் கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெலிக்கடை பொலிஸார் , சம்பவம் தொடர்பில், நீதிமன்றில் சமர்ப்பணம் முன்வைத்துள்ளது. இதன்போது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, வேறொரு உயர் அதிகாரிக்கு பொறுப்பளிக்குமாறு கோரியுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படும்போது, பொலிஸாரால் , தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் பேணப்படுகின்ற நிலையில், அந்தப் பட்டியலை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், குறித்த பெண்ணின் பெயர், பொலிஸாரின் தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் பதியப்படவில்லை என, வெலிக்கடை பொலிஸார் மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில், தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
