பொறுப்பான நடத்தைகளை பின்பற்றுமாறு இலங்கை திருச்சபை கோரிக்கை
இலங்கை திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில், நாடு கடத்தப்பட்ட ஒரு ஜனாதிபதி, களத்தில் ஒரு பதில் ஜனாதிபதி மற்றும் முற்றுகையின் கீழ் ஒரு பிரதமர் இருப்பது போல் தோன்றுவதாக இலங்கை திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடியை கையாள்தல்
இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் நாடாளுமன்றம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதேவேளை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கவோ அல்லது அமைதியான கூட்டத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கோ அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், இலங்கை திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
