சுன்னாகம் பொலிஸாரின் மோசமான நடவடிக்கை: கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Ceylon Teachers Service Union
By Kajinthan Nov 11, 2024 04:07 PM GMT
Report

யாழ். (Jaffna) சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (11)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "சுன்னாகம் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், ஹயஸ் ரக வாகனத்தில் வந்திருந்தவர்களில் பெண்கள் ஆண்கள் என பார்க்காமல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் வீசியதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

பதிவு செய்யப்பட்ட காணொளி 

இந்த சம்பவம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற வேளையில் எங்களுடைய ஆசிரியர் சங்கத்தின் வலிகாமம் வலையத்தினுடைய பிரதிநிதியான நவநீசன் அந்த வழியால் வந்த பொழுது குறித்த சம்பவத்தை காணொளி எடுத்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரின் மோசமான நடவடிக்கை: கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் | Chunnakam Police Issue Ctu Condemnation

இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராகிய பிரியந்த வீரசூரிய, பொலிஸாரின் அராஜகத்தை காணொளியாக பதிவு செய்ய முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் என பெயர் எழுதப்பட்ட நீல நிற முச்சக்கர வண்டிகளில், சிவில் உடைகளில் வந்த பொலிஸாரினால் அவரது தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்தப் பெண்மணி பதிவு செய்த சாதனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நவநீசன் தனது கைபேசி பொலிஸாரினால் பறிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையிலும், இதுவரை அவரது கைப்பேசி கொடுக்கப்படவில்லை.

கொழும்பில் தந்தையின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண் குழந்தை

கொழும்பில் தந்தையின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண் குழந்தை

சட்ட நடவடிக்கை

இந்நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்து சென்று சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையை சுன்னாகம் பொலிஸார் மீறுவதாக அமைந்துள்ளது.

சுன்னாகம் பொலிஸாரின் மோசமான நடவடிக்கை: கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் | Chunnakam Police Issue Ctu Condemnation

ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இங்கே பொலிஸாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் தெரிவித்தாலும் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அராஜகங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, எமது தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட கைப்பேசி மிக விரைவாக வழங்கப்பட வேண்டும். அநாகரிகமாகவும் அராஜகமாகவும் செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த காலப்பகுதிக்குள் அவருடைய கைப்பேசி வழங்கப்படாவிட்டால் இலங்கை ஆசிரியர் சங்கமானது அதற்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும் என இந்த இடத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.

நள்ளிரவில் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

நள்ளிரவில் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US