அம்பாறையில் களையிழந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள்
அம்பாறை மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குறைந்தளவான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அங்கு, பெரும்பாலான பகுதிகளில் பல வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின்குமிழ்கள் மற்றும் நத்தார் மரங்கள் என்பன வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.
நத்தார் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் இந்த பகுதியில் கடந்த காலங்களில் மும்முரமாக விற்பனையாகிய போதிலும், இந்த முறை கடந்த ஆண்டை விட வியாபாரம் குறைவாக உள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிராத்தனை
மேலும், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இருந்தபோதிலும், அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் மாத்திரம் இடம்பெற்றதுடன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் தவிர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன், வழமை போன்று நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரவு அதிகமாக இருந்ததால் தேவாலயத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.














பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri