நெருங்கும் பண்டிகைக் காலம்! கேக் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பண்டிக்கை காலங்களில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன(N.K Jayawardena) தெரிவித்துள்ளார்.
கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரியதாகவும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் கேக் உள்ளிட்ட உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் கேக் ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
இன்று முதல்... இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி News Lankasri