திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம்! மாவட்டத்திற்கு பொறுப்பான ஆயரிடம் முக்கிய கோரிக்கை
மாதா சொரூபத்தை வைத்து மத முரண்பாட்டினை ஏற்படுத்த இடமளிக்க கூடாது என இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார்.
சைவத்தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் சிவராத்திரி ஆரம்பிக்கும் போதும் இவ்வாறான ஒரு சிலர் சமய முறுகலை ஏற்படுத்துவதற்காக மாதா சொரூபம் ஒன்றினை வைத்து பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்பட்டனர். அது பல்வேறு அழுத்தங்களின் காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்த வருடமும் சிவராத்திரி பூஜைகள் இடம்பெறவிருக்கும் நிலையில் இவ்வாறு அந்த பிரதேசத்தில் மாதா சொரூபம் ஒன்று வைக்கப்பட்டிருப்பது திட்டமிட்டு மதங்களுக்கிடையே ஒரு சில கிறிஸ்தவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகவே எண்ணத்தோன்றுகிறது.
எவருக்கும் தங்களது சமயத்தினை பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் மற்றுமொரு சமயத்திற்கு பிரச்சினை ஏற்படும் வகையில் அல்லது முரண்பாடுகள் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட கூடாது.
ஆகவே இது குறித்து அந்த மாவட்டத்திற்கு பொறுப்பான ஆயர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இந்து மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்குமிடையில் சமய முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்பட கூடாது.
எனவே இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு கிறிஸ்தவ மதத்தலைவர்கள் முன்வரா விட்டால் அது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இந்த சம்பவம் குறித்து எமது இலங்கை இந்து குருமார் ஒன்றியம் மிக வன்மையாக கண்டிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம்! சைவ மகா சபை கடும் கண்டனம்





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
