அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் போராட்டம்: மக்கள் கடும் சிரமம் - சின்னமோகன் குற்றச்சாட்டு
கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தால் மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகுகிறார்கள் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று(25.01.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமலுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை:சர்ச்சையை கிளப்பியுள்ள பதிவு..
வேலை நிறுத்த போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்.
வடகிழக்கில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் தான் மருத்துவ உதவிக்காக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அன்றாட கூலித்தொழில் செய்து வாழும் மக்கள் தங்களது வைத்திய தேவைகளுக்காக பல மைல்கள் கடந்து போக்குவரத்துக்கு பணம் செலவளித்து வைத்தியசாலைக்கு சென்று திரும்பிச் செல்லும் அவல நிலைமைகளை நேரில் காணக்கூடிய நிலைமை திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்திய சாலைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக சிகிச்சைப்பிரிவுகள், மற்றும் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலை என்பனவற்றில் வேலை நிறுத்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது பாராட்டுக்குரியது.
வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களை நோயாளர்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கும் இந்த போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகும், மக்களின் உயிரோடு விளையாடும் இந்த இக்கட்டான நிலைக்கு அரசாங்கம் உடனடியாக நிரந்தர தீர்வுக் காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி