மலையகத்துக்கான புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த சீனப்பெண் படுகாயம்
மலையகத்துக்கான புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த சீனப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த சீனாவைச் சேர்ந்த யெங் ஜீ (Yang Jie) எனும் சீனப் பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
சீனப்பெண் படுகாயம்
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த அவர், இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையம் அருகே சுரங்கமொன்றின் பக்கவாட்டில் மோதுண்டு தலைஅடிபட்டு நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
தலை மற்றும் பாதங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அதனையடுத்து ஹப்புத்தளை பிரதேச மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து தியத்தலாவைக்கும், நிலைமை பாரதூரமாக இருந்த காரணத்தினால் தற்போது பதுளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீன சுற்றுலாப் பயணியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
