தைவான் எல்லையில் அத்துமீறிய சீன போர் விமானங்கள்! தொடரும் பதற்றம்
தைவான் எல்லையில் ஒரே நாளில் 33 சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனா எச்சரிக்கை
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியென சீன அரசாங்கம் கூறி வரும் நிலையில் தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த சீனா இதுபோன்ற செயலில் அமெரிக்கா இனி ஈடுபட்டால் தைவான் மீது படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் , சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணம் சீனாவின் கோபத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

போர் பயிற்சி
இதன் காரணமாக தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் எல்லையில் 33 சீன போர் விமானங்கள் தென்பட்டதாகவும், அந்த போர் விமானங்கள் தைவானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், இரு நாடுகளிடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri