இலங்கையில் இரகசிய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ள சீன பிரதிநிதிகள் குழு?
சீன பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையில் இரகசியமாக கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கருத்துக் கணிப்பு குறித்த இரகசிய அறிக்கை பெய்ஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நாட்களில் இலங்கை வருகை தந்த இந்த சீன குழுவினர், சீன அரசாங்கம் இலங்கை தொடர்பில் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் ராஜபக்சகளுக்கு ஆதரவான சீன நிலைப்பாடு என்பன குறித்து கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சீனாவின் நடவடிக்கைகளில் எவ்வாறான தவறுகள் இழைக்கப்பட்டன அவற்றை எவ்வாறு திருத்திக்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டு இரகசிய அறிக்கையொன்று பெய்ஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் இதுவரையில் சீனாவினால் பின்பற்றப்பட்டு வந்த ராஜபக்சக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என குறித்த இணையதளம் தெரிவித்துள்ளது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri