சீன ஆதரவு கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் - ஐக்கிய மக்கள் சக்தி
சீன ஆதரவு கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறினால் சீனாவை மையப்படுத்திய துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில், துறைமுக நகர் திட்டமானது சீன நிறுவனத்தின் திடட்மாகவே பிரச்சாரம் செய்யப்படும் எனவும் இலங்கையின் திட்டமாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவைத் தாண்டிய அடிப்படையில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் பல்வேறு நலன்களை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீடுகள் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு கியைடாது என்ற போதிலும் இலங்கை ஒரு நாடுக்கு மட்டும் பக்கச்சார்பாக இருப்பதனை ஏற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri