தீவிரமடையும் போர்க்களம்! உக்ரைன் ஜனாதிபதிக்கு வந்த தொலைபேசி அழைப்பு
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தன்னுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள தொலைபேசி உரையாடல் செய்தேன்.
இந்த அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும் எமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அரசியல் தீர்வுக்கு அழைப்பு
மேலும் அழைப்பின் போது சீன ஜனாதிபதி, ஜெலென்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை தான், போரிலிருந்து வெளியேற ஒரே வழி என்று கூறியதாக அந்நாட்டின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
I had a long and meaningful phone call with ?? President Xi Jinping. I believe that this call, as well as the appointment of Ukraine's ambassador to China, will give a powerful impetus to the development of our bilateral relations.
— Володимир Зеленський (@ZelenskyyUa) April 26, 2023
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான போரில் சீனா அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தாலும், ரஷ்ய படையெடுப்பை சீன ஜனாதிபதி ஒரு போதும் கண்டித்ததில்லை.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி, ஜி ஜின்பிங் உடன் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரியில் சீனா, உக்ரைனின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் 12-புள்ளி அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.