போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைந்த சீனப்பிரஜை! இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தலையீட்டில் விடுவிப்பு
போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப்பிரஜை மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கை நகர்புற அபிவிருத்தித்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் தலையீட்டினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமையன்று (18.05.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள்
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறித்த சீனப்பிரஜையின் கடவுச்சீட்டு போலியானவை என்று கண்டறிந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த மூவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அவர்கள், ஒழுக்கமற்றமுறையில் நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் தலையீட்டினால், மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போலியான கடவுச்சீட்டு
இதில் போலியான கடவுச்சீட்டுடன் பயணித்த சீனப் பயணியை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரிய இராஜாங்க அமைச்சர் அவர் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
தமது அமைச்சின் கீழ் வரும் சில வீட்டுத் திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்வதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இதேவேளை முதலீட்டாளருடன் வந்திருந்த மற்றுமொரு சீன பிரஜையும் எகிப்தியர் ஒருவரும் நேற்று (21.05.2023) காலை விடுவிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்துள்ள குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போலி கடவுச்சீட்டில் கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது ஆச்சரியப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri