இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் சீனக்கடற்படை
சீனக் கடற்படை இலங்கையில் புதிய துறைமுகத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.இது பிராந்தியத்தில் உள்ள இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.
எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்திச்சேவைக்கு தகவல் வழங்கிய இந்திய கடற்படையின் துணைத் தளபதி அட்மிரல் ஜி அசோக் குமார் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்க இந்திய கடற்படை எப்போதும் தயாராக உள்ளது. எனவே யாரும் தமது பாதுகாப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சீனா, இலங்கையில் துறைமுகம் ஒன்றை வைத்திருப்பது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்ய விரும்பினால், இது மிகவும் கடினமான கேள்வியாகும்.
எனவே இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியுமா என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் கடலோர பாதுகாப்பு வலையமைப்பை நிறுவுவது போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததை விட இன்று இந்தியா மிகவும் தயாராக இருப்பதாக அட்மிரல் ஜி. அசோக்குமார் கூறியுள்ளார்.
இந்திய கடற்படை முழுத் திறனைக் கொண்டு இயங்கும் சக்தியாகும், மேலும்
எதிர்காலத்தில் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கப்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam