அசாதாரண அத்தியாயத்தை ஹம்பாந்தோட்டையில் சீனா எழுதும்! சூளுரைத்த ஜியான்மின்
இலங்கையில், சீனாவின் அண்மைய முதலீட்டுத் திட்டங்களின் முதலீடுகள், ஏறக்குறைய 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபனமான China Merchants குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்த Miao Jianmin, 15 திட்டங்களுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில், நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்த முதலீட்டை
2008ஆம் ஆண்டு இலங்கை சந்தையில் நுழைந்த சீன மெர்சண்ட்ஸ் குழுமம்,2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1.68 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், வளமான ஹம்பாந்தோட்டை நிலத்தில், சீனா அசாதாரண அத்தியாயத்தை
எழுதும், அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முன்னோக்கி நகர்த்தும்
என்றும் ஜியான்மின் நிகழ்வின்போது கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
