சீன முதலீடு என்பது மிகபெரும் சாதனை! ஆளும் தரப்பு பெருமிதம்
மூன்று மாதக் குறுகிய காலத்தில், இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்துளள்ளார்.
தமது அரசாங்கத்தில் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சீனாவின் மூன்று பில்லியன் முதலீடு என்பது, ஒரு பெரிய சாதனை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்திற்கு தூய்மையான மக்கள் ஆணையை வழங்காததால் இந்த வகையான முதலீடு வரவில்லை என்றும் இந்திக கூறியுள்ளார்.
தூய்மையான மக்கள்
தனது அரசாங்கத்திற்கு தூய்மையான மக்கள் ஆணையைப் பெற்றதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தூண்டப்படுகிறார்கள் என தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு, நாட்டின் அனைத்து பொருளாதார குறிகாட்டிகளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் ஆரோக்கியமான சூழ்நிலை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
