யாழ் மக்கள் தொடர்பில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த தூதுவர்! (Video)
சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் யாழ்ப்பாண மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை இன்றையதினம் வழங்கி வைக்கிறது.
இந்த உதவி வழங்கும் நிகழ்வில் ஒரு ஆரம்ப நிகழ்வாகவே நாங்கள் கருதுகின்றோம். இன்று ஆரம்பமான இந்நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம். குறிப்பாகச் சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கோவிட் வைரஸ் தாக்கத்தின் போது சீனா நாடானது இலங்கைக்குப் பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது.
அதேபோல வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும்பங்காற்றியுள்ளது.
அதேபோல் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநரிடம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் என ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரபொறி முறையினையும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளோம். அதேபோல் 5 மடிக்கணணிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்திற்கு வழங்கியுள்ளோம்.
எனவே இவை அனைத்தும் ஒரு ஆரம்பமாகவே நாங்கள் கருதுகின்றோம், எதிர்காலத்தில் சீன தூதரகம் யாழ்ப்பாண மக்களுக்குத் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும்.
உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட் காலத்தில் இந்த சிறிய உதவி வழங்கப்படுவதை ஒரு ஆரம்பப்புள்ளியாகவே நாங்கள் பார்க்கின்றோம். எதிர்காலத்தில் பல உதவித்திட்டங்கள் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ
சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்
சம்மேளனத்தின் ஊடாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன்
ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான
வலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.
சீன தூதுவர் கடலட்டை குஞ்சு இனப் பெருக்க பண்ணைக்கு விஜயம்
சீன தூதுவர், இலங்கை சீன கூட்டு முயற்சியான குயிலான் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார்.
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அரியாலையில் உள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வருகை தந்திருந்தார்.
குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்றுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு இலாபத்தினை பெற்றுக் கொள்ள
முடியும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த
முதலீட்டின் மூலம் அந்நியச் செலாவணியை நாட்டிற்குப் பெற்றுக் கொள்ள
முடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது.
அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” எனத் தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார். இதில் ரொடி(கள்) கிடைக்கும்.
அற்ககோல் எனச் சைகை மூலம் காண்பித்து இது
உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கப்படுத்தியபோது தூதுவர் அதற்கு ஹா ஹா என
சிரித்த சம்பவம் இடம்பெற்றது.











இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
