அடுத்த மாதம் இலங்கைக்கு வருகிறாரா சீன வெளியுறவு அமைச்சர்?
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அண்மைய மாதங்களில் சீனாவிலிருந்து மூன்றாவது மூத்த உத்தியோகபூர்வ நிலை பயணமாக அமையவுள்ளது.
ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் ஃபெங் கடந்த வாரம் நாட்டிற்கு வந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டிருந்தன.
கடந்த ஆண்டு சீன கம்யூனிசக்கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும், மத்திய குழுவின் வெளியுறவு ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான யாங் ஜீச்சியும் கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களுக்காக வருகை தந்தார்.
இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் தனது பிராந்திய பயணத்தின் ஒரு
பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 28 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
