இலங்கையில் தடைகளை எதிர்கொள்ளும் சீன நிறுவனம்
இலங்கையில் முதலீடு செய்ய முயன்று வரும் முன்னணி சீன பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், தமது நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் தடைகளை எதிர்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஒரு முன்னணி சீன அறிஞர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினோபெக் தடை
சங்காய் சர்வதேச ஆய்வுகளுக்கான நிறுவனங்களின் தெற்காசிய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த உறுப்பினரும் இயக்குநருமான லியு சோங்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை, சீனாவின் வெளியுறவுக் கொள்கை, தெற்காசிய பிரச்சினைகள், பட்டுப்பாதை முன்முயற்சி மற்றும் உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றில் ஆராய்ச்சி கவனம் செலுத்தும் இந்த அறிஞர் அவர். பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ளார் சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், இலங்கையில், ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க விரும்புகிறது.
எனினும், உள்ளூர் நிறுவனங்கள் சீன எண்ணெய் நிறுவனங்கள் இங்கு வருவதை விரும்பாததால் சினோபெக் தடைகளை எதிர்கொள்கிறது.
இது போட்டியின் பிரச்சனை. ஒரு சீன எண்ணெய் நிறுவனம் இங்கு வந்தால், அதன் வசம் உயர்ந்த தொழில்நுட்பங்கள் உள்ளன.
சீனர்களின் முதலீடு
இதன்போது கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நேரிடும் என்பதால், உள்ளூர் நிறுவனங்களின் அழுத்தம் ஏற்படுவதாக சீன அறிஞர் குறிப்பிட்டுள்ளார் கடந்த காலத்தில், சீனா இலங்கையில் நிறைய முதலீடு செய்து, ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பல உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியது.
எனினும், இது பயனுள்ளதாக மாற காலம் தேவை. இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வர முடியாது.
எனவே, சீனர்கள் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில், சீனர்கள் ஏன் இவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் நினைக்கிறார்கள்.
எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளூர் மக்களுக்கு லாபத்தை உருவாக்கியுள்ளது என்பதை தற்போது தெரிந்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது என்று லியு சோங்கி குறிப்பிட்டுள்ளார்.