சீனாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சர்க்கஸ் நிகழ்ச்சி!பறிப்போன பெண்ணின் உயிர்
சீன சர்க்கஸ் கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் போது உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தனது கணவருடன் சர்க்கஸ் காட்சிகளை செய்யும் போதே "சன்" என்ற பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவில்லை
சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தும் போது கலைஞர் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்த உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த போதும்,அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை பார்வையிட கூடியிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு இன்றி சர்க்கஸ் நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.


