தீவிரமடையும் உக்ரைன் ரஷ்யா போர்! - அமெரிக்காவிற்கு சீனா அழைப்பு
உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்துள்ள போதை முடிவுக்கு கொண்டுவரவும், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்கவும் சீனா அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க மற்றம் சீனா ஜனாதிபதிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள். இதன் போது கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி,
“தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. உலகம் அமைதியாகவோ, நிலையானதாகவோ இல்லை. உக்ரைன் நெருக்கடி நாம் பார்க்க விரும்பும் ஒன்றல்ல. போர்க்களத்தில் சந்திக்கும் நிலைக்கு நாடுகள் வரக்கூடாது என்பதை மீண்டும் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா - சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா விமர்சித்து வரும் நிலையில், சீன ஜனாதிபதியின் இன்றைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.