பிரதமர் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமான பதில்

China Covid Vaccine Agreement Students Mahinda Rajapaksa
By Kanamirtha Jan 09, 2022 02:40 PM GMT
Report

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்குச் சீனாவிற்கு வருகை தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீவை அலரி மாளிகையில் இன்று (09) சந்தித்த போது குறித்த விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ,

இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியாக அறிவுறுத்தினார்.

சீனாவின் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

கோவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கு முடியாது போயுள்ளது என கூறினார்.

பிரதமரின் கோரிக்கைக்குப் பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஒத்துழைத்தல், துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான முதலீடுகளை ஈர்த்தல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையின் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே பௌத்த மற்றும் கலாச்சார உறவினையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பினை தொடர்ந்து கீழ்வரும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீன கொம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு நூறாண்டுகள் பூர்த்தி மற்றும் சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு நினைவு நாணயமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்நாணயங்களை இதன்போது பிரதமர் சீன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ , 'இலங்கைக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்குச் சீனா தொடர்ந்து செயற்படும்' எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது,

 அமைச்சர் அவர்களே, உங்களை மீண்டும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம். இத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நீங்கள் இலங்கைக்கு வருகைத்தந்தீர்கள். நீங்கள் மீண்டும் வருகைதந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி.

இந்த ஆண்டு நம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான ஆண்டாகும். இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். இந்த முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி விசேட நினைவு நாணயத்தை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான ஒத்துழைப்பிற்குச் சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினோஃபார்ம் தடுப்பூசிகளின் தொடர்ச்சியான விநியோகம் எங்கள் தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளது.

ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையின் பொருளாதாரமும் தொற்றுநோய் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. நமது பொருளாதார மீட்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான சீனாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால் சீனா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன், இந்த சவால்கள் விரைவில் சமாளிக்க முடியும் என நம்புகிறோம். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உங்களுடனும் சீன அரசாங்கத்துடனும் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US