நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் - அமெரிக்காவை எச்சரித்த சீனா
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலையிடக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது
இந்நிலையில், தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதும் நிலையில்,இவ்வாறு அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் சீன வெளியுறவு மந்திரி வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam