வர்த்தக போரின் எதிரொலி: அமெரிக்கா செல்லும் சீனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்கா(USA) செல்லும் சீனர்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சீனப் பொருட்களுக்கு 104% வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க-சீனா வணிகப் போர் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி
இதனை தொடர்ந்து சீனாவும்(China) அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் பரஸ்பர வரியை நடைமுறைப்படுத்துவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரியை விதித்து ட்ரம்ப் உலக பொருளாதாரத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
சீனாவின் பதிலடி
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்கா மீது 84 சதவீதம் பதில் வரி விதித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்கா செல்ல விரும்புவோர் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சீன கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |