வடக்கின் மூன்று தீவுகளில் கால் பதிக்கும் சீனா! - இந்தியாவின் பகைமைக்கு ஆளாகும் இலங்கை?
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படும் சீனாவின் மின் திட்டங்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்தியாவிலிருந்து 40 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் இலங்கையில் அமைந்துள்ள தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவுடனான முரண்பாடுகள் மேலும் வலுவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையில் பாரிய போட்டியிருப்பது உலகில் அனைவரும் அறிந்த விடயங்களாகும்.
அந்த போட்டியில் சிக்கியுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. இது மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.
இந்த மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமையால் இந்தியாவின் பகைமையை அதிகரித்துக் கொள்கின்றோம்.இது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.
அரசாங்கத்திற்கு முறையான வெளிநாட்டு கொள்கையும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகக் குறைந்தது , இராஜதந்திர மட்டத்தில் இதனை எவ்வாறு அணுகுவது என்ற தெளிவு கூட இந்த அரசாங்கத்திடம் இல்லை.
முழு உலகமும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டியை அறிந்துள்ள போதிலும், இந்தியாவிற்கு அருகிலுள்ள தீவுகளில் சீனாவிற்கு வாய்ப்பளிப்பது தேசிய பாதுகாப்பிற்கும் , சுயாதீனத்தன்மைக்கும் , அபிவிருத்திக்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.
அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
