சீன கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையாக மாறாது: இந்தியாவில் ஹரீன் பெர்ணாண்டோ- செய்திகளின் தொகுப்பு
சீன கப்பலின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா நிலைமையை புரிந்துகொண்டுள்ளதால் கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையை ஏற்படுத்தாது என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அஹமதாபாத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக அஹமதாபாத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், சீனா இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது கடந்த காலங்களில் இலங்கையின் தேவைகளை புரிந்துகொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இலங்கை ஒரு சிறிய நாடு இலங்கை அனைவருடனும் சிறந்த உறவை பேணுகின்றது.
இந்தியா இதனை புரிந்துகொள்ளும் என நான் நிச்சயமாக கருதுகின்றேன்.இந்தியாவுடன் எங்களிற்கு சிறந்த இராஜதந்திர உறவுகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது கடந்த காலங்களில் அவர்கள் எங்கள் தேவைகளை புரிந்துகொண்டுள்ளனர். ஆகவே இதனை பாரிய இராஜதந்திர விவகாரமாக கருதவேண்டியதில்லை என தான் நினைப்பதாக ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
