சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் ஜெட்: முதல் வணிகப் பயணத்தை ஆரம்பித்தது
சீனா முதல் தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ஜெட், தனது முதல் வணிகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
நேற்றைய தினம் (28.05.2023) அதிகாலை தலைநகர் பீய்ஜிங்கை நோக்கி சி919 என்ற இந்த விமானம் ஷாங்காயில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
ஏர்பஸ் மற்றும் போயிங்கின் ஒற்றை இடைகழி ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நம்பிக்கையில், சீனாவின் கொமர்ஷியல் ஏவியேஷன் கோர்ப்பரேஷனினால் தயாரிக்கப்பபட்டுள்ளது.
விமானப் பயணம்
இயந்திரங்கள் உட்பட்ட சில விடயங்களில் இன்னும் மேற்கத்திய கூறுகளை சீனா பெரிதும் நம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் - பீய்ஜிங் நோக்கிய இந்த விமானப் பயணம், 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மூன்று மணி நேரத்திற்குள் நிறைவு பெற்றது.
இந்தநிலையில் கோமாக் - ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 150 விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனினும் இதில் பெரும்பாலானவை உள்நாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த கோரல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
