சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைவடைந்துள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஹெனான் மாகாணத்தில் 1978-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேருகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்ததாக புள்ளிவிவர தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 43 ஆண்டுகளில் மிகக் குறைவு என அந்த புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
