சீன மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த நோயாளிகள்! வெளியான காணொளி
சீன தலைநகர் ஃபெங்டாய் மாவட்டத்தில்(Fengtai District) உள்ள பெய்ஜிங் சாங்ஃபெங் மருத்துவமனையில்(Beijing Changfeng Hospital) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 21 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்
சீனாவில் அவசரகால குழுவிற்கு தகவல் வழங்கப்பட்டு,மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்பு பணிகள் சுமார் 2 மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட 71 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்
BIG BREAKING: #Beijing
— Ashutosh Pandey (@Iashutoshp) April 18, 2023
At least 25 people have died, after a fire broke out in a hospital in Beijing.
Do you remember China mocked India when fire broke out at Serum Institute, Hyderabad during the Covid Crisis.
Karma hits back.#hospital #fire #ChinaNews pic.twitter.com/qaHoRhbplZ
இந்த திடீர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமூக ஊடகங்களில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, நோயாளிகள் கட்டடத்தின் மாடியில் இருந்து குதிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.