யாழ். குடாநாட்டுக்கு அருகில் உள்ள மூன்று தீவுகள் தொடர்பில் இந்தியாவின் எதிர்ப்புக்கு பதிலளித்துள்ள சீனா
யாழ். குடாநாட்டுக்கு அருகில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பாக இந்தியா முன்வைத்துள்ள எதிர்ப்புக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் வர்த்தக ரீதியான ஒப்பந்தம், சீனாவின் தனியார் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த திட்டத்திற்கு இந்தியா வெளியிட்டுள்ள எதிர்ப்பு தொடர்பில் பதிலளித்துள்ள சீனத் தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர், எந்த நாடாக இருந்தாலும் நிறுவனம் ஒன்றின் சட்ட ரீதியான உரிமைகளை பாதுகாப்பது முக்கியமானது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து 48 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில சீன நிறுவனம் இந்தமின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
