சாணக்கியனுக்கு சீனா வழங்கியுள்ள பதிலடி
இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில், இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் உரையாற்றிய போது, சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், சீனத் தூதரகம் டுவிட்டரில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா முன்னெடுத்த நடவடிக்கை
அந்த பதிவில் மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை நாம் ஊக்குவித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகிறது.
நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றது.
சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டது. மேலும், பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டிற்கு பயணம் செய்து வருவதுடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Sorry Mr. MP, your understanding is incorrect and incomplete.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) November 30, 2022
China is the biggest supporter to Sri Lanka in fighting COVID19 & livelihood relief, including in your district Batticaloa.
China is also the first responder to LK's financial crisis since its default in April:
1/ https://t.co/QbK2v8No5J


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 16 மணி நேரம் முன்

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri
