யுவான் வாங்-5 கப்பல் சர்ச்சையை முறியடித்த சீனாவின் உறுதிமொழி-செய்திகளின் தொகுப்பு
சீன கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது.
சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சீனாவின் யுவான் வாங்-5 கப்பலானது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிபர் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையவுள்ளது என்றும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கா என காரணம் தெரிவித்தாலும் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கப்பல் என்பதால் பாதுகாப்பு அச்சம் நிலவி வருகின்றது, இதனால் கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்துவந்ததுடன் கப்பலின் வருகைக்கான காரணத்தை விளக்குமாறும் அத்தோடு இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட போகின்றது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் கோரியிருந்தது.
மேலும், இந்நாட்டு கடலில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது என இலங்கை அரசு வலியுறுத்தியிருந்தது. அதன்படி, சீனாவின் யுவான் வாங் 5 கப்பலானது நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என உறுதியளித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,