ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேல் போரின் தாக்கம் : திணறும் சீன மக்கள்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த சுங்கக் கட்டணங்களை சீனா சமாளித்திருந்தாலும், ஈரான் போரின் தாக்கம் இப்போது பெரிதாக உணரப்படுகிறது என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
"நாங்கள் வேலை செய்துகொண்டே இருக்கிறோம், ஆனால் எங்களுக்கோ வாழ்க்கையே இல்லை. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்று சீன மக்கள் திண்டாடுவதாகவும் குறித்த தகவல்கள் விளக்குகின்றன.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற தேர்தல்! வாக்களித்த மறுநொடியில் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதம்
கவலைக்கிடமான சீன மக்கள்
சீன உற்பத்திகளில் மலிவான மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலிருந்து தானியங்கி மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களைச் சமாளிக்கும் அதே வேளையில், வீட்டிற்குப் பணம் அனுப்பப் போதுமான அளவு சம்பாதிக்கப் போராடும் அவர்கள், மிகுந்த விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறதென கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் உலகப் பொருளாதாரத்தை உலுக்குவதற்கு முன்பே இந்த நிலை இருந்தது. என்றும கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்பின் வரிகள் பெரிதும் தாக்கிய வேளை சீனாவின் பொருளாதாரம் ஏற்கனவே வேலையின்மையுடன் போராடிக் கொண்டிருந்தது.
இருப்பினும், அது மீண்டெழும் திறனை நிரூபித்து, ஏற்றுமதியை அதிகரித்ததுடன் சுமார் 5 வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்திகளின் வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் கூட அதிருப்தி நிலைமை தொடர்ந்தும் புகைந்து கொண்டு தான் இருந்தது.
ஏற்படும் பாதிப்புக்கள்..
இப்போது மத்திய கிழக்கு மோதல் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்புக்கள் தொழிற்சாலை ஓர்டர்கள், செலவுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், தெற்குத் தொழில்துறை மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஃபோஷானில், தொழிலாளர்களின் சிறந்த வாய்ப்பு, பிரகாசமான சிவப்பு எழுத்துக்களில் அவர்கள் கண்முன்னே தெளிவாகத் தெரிகிறது.
சில வாரங்களுக்கு பிளாஸ்டிக்கை வார்ப்பது அல்லது ஒரு கைபேசியின் பாகங்களைத் திருகிப் பொருத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 18 முதல் 20 யுவான் வரை ஊதியம் வழங்கப்படும். அதாவது சில டொலர்கள் அல்லது பவுண்டுகள் மட்டுமே தரப்படும்.
மற்றொரு கிராமப்புற மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் "நான் வேறு எங்காவது வேலை தேட முயற்சிக்கப் போகிறேன்," என்கிறார்.
அவர்களில் பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்களாக காணப்படுவதுடன் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் அவர்கள் மேலும் விரக்தி நிலையை அடைந்துள்ளனர் என குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam