டீசல் வழங்குவதற்கு சீனா இணக்கம்: பதிலளிக்காத இலங்கை
சீனாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வது குறித்து இலங்கை இன்னமும் தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு டீசல் கப்பல் ஒன்றை வழங்குவதற்கு சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த டீசலை பெற்றுக் கொள்வதா இல்லையா என்பதனை இலங்கை இன்னும் தீர்மானிக்கவில்லை.

அவசர உதவியாக இவ்வாறு டீசல் கப்பல் ஒன்றை வழங்க சீனா முன்வந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்றை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பெட்ரோலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே டீசல் விநியோகம் செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam