“இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா - பதற்றத்தில் இந்தியா”
இலங்கை அரசானது எல்லா விதமான திட்டங்களையும் வகுத்து அதனை சரியான முறையில் பூர்த்தி செய்த பின்னர் இறுதி நேரத்தில் சீனாவுடன் இணைந்து வெளியிடுகின்றதாக பிரித்தானியாவின் தமிழர் பேரவையினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி ( Ravi) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையில் சீனமயமாக்கல் தலைத்தூக்கியுள்ளமையானது தமிழர்களுக்கு எவ்வளவு பிரச்சினையாக மாறியுள்ளதோ அதனை விட பல மடங்கு இந்தியாவிற்கும்,சர்வதேச நாடுகளுக்குமிடையில் பதற்றத்தினை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொருத்தவரையில் தமிழ் பிரதேசங்கள் துண்டாடப்பட்டால் ஒருங்கிணைந்த தமிழ் பிரதேசமாக தீர்வினை பெறுவது கடினம்.
தற்போது சர்வதேசத்தின் பார்வைகள் தமிழர்கள் மீது திரும்பியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சீனமயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் சிங்களமயமாக்கல்,பௌத்தமயமாக்கல் பின்னர் சீனமயமாக்கல் என நடைபெற்று வருகின்றது.இதனை உலகிற்கு ஓங்கி அறைந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் சீனமயமாக்கல் தலைத்தூக்கியுள்ளமையானது தமிழர்களுக்கு எவ்வளவு பிரச்சினையோ அதனை விட பல மடங்கு இந்தியாவிற்கும்,சர்வதேச நாடுகளுக்குமிடையில் பதற்றத்தினை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.