வடக்கில் முதலீடு என்ற போர்வையில் நிலைகொள்ளும் சீன இராணுவம்-செய்திகளின் தொகுப்பு
வடக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாக இந்திய பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தி தொடர்பில் அரசாங்கம் தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், சீன இராணுவத்தின் பிரவேசமானது இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமாகும்.
இலங்கையின் பூகோள அரசியல் தொடர்பில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பிழையான அணுகுமுறைகளை எடுத்து நாட்டை சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது.”என தெரிவித்துள்ளார்.